Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இலவசமாக மதுபானம் வேண்டும்”…. ஊழியரை தாக்கிய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில் குமார் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று கடை ஊழியரான சக்திவேலிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். அப்போது சக்திவேலுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபப்படைந்த செந்தில்குமார் காலி மதுபாட்டிலை எடுத்து சக்திவேலின் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கொடைக்கானல் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் செந்தில்குமாருக்கு எட்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |