Categories
அரசியல் மாநில செய்திகள்

இலவசமாக வாஷிங் மிஷின் எப்படி..? 6 லட்சம் கோடி கடன் இருக்கே – சீமான் கடும் தாக்கு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், அதிமுக, திமுக இலவசங்களை அள்ளி வீசுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் எங்களுடைய அறிக்கையில் கல்வி, மருத்துவம், மின்சாரம் போன்றவற்றை ஊக்குவிக்கும் நல்ல அறிவிப்புகள் தான் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசு வீட்டுக்கொரு வாஷிங் மிஷின் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் 6 லட்சம் கோடி கடன் இருக்கும்போது இது  சாத்தியமாகும் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

Categories

Tech |