தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும்.
இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.