Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வேணுமா…? உடனே அப்ளை பண்ணுங்க… என்னென்ன ஆவணங்கள் தேவை… முழு விவரம் இதோ…!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம்.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதேபோலவே தற்போதும் வழங்கப்படும். அதற்கான தகுதிகள் என்ன, தேவையான ஆவணங்கள் என்ன, எப்படி பதிவு செய்வது என்று பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் இலவசம்:

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஏற்கனவே சமையல் சிலிண்டர் இணைப்பு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்தில் பயனாலியாக இருக்கக்கூடாது.

இதே போன்ற வேறு திட்டங்களின் கீழ் எந்த நன்மையையும் பெற்றிருக்கக்கூடாது.

என்னென்ன ஆவணங்கள் 

நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஜாதி சான்றிதழ்.

ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள், அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

ஜாதி சான்றிதழ் உடன்  முக்கிய ஆவணங்கள் விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், வங்கி கணக்கு மற்றும் வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலவச சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மிகவும் அவசியம்.

குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்கள்

பேங்க் பாஸ் புக் அல்லது ஜன் தன் வங்கிக் கணக்கின் விவரங்கள்

எப்படி பதிவு செய்வது:

இந்த திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்ப படிவத்தினை அருகில் உள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் இருந்து பெற வேண்டும். இல்லையெனில் https://www.pmujjwalayojana.com/என்ற வெப்சைட்டில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படிவத்தை நிரப்பி எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் விண்ணப்பமும் வழங்கப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.

Categories

Tech |