Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வேண்டுமா….? மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது…? வாங்க பார்க்கலாம்…!!!!

இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் இரண்டாம் பாகம் உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படுகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்தத் திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குபவர்களுக்கு வட்டியில்லா கடனும், இலவச சிலிண்டரும் கிடைக்கின்றது. இந்த திட்டத்தில் எப்படி இணைப்பைப் பெறுவது என்பது பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு www.pmuy.gov.in என்ற வெப்சைட்டிலேயே விண்ணப்பிக்கலாம்.

அந்த வெப்சைட்டில் சென்று இதற்கான விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு விவரம், ஆதார் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மேற்கூறிய விவரங்களுக்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர் தகுதியானவர்களுக்கு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.

2021-22 மத்திய பட்ஜெட் அறிக்கையில் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Categories

Tech |