Categories
மாநில செய்திகள்

“இலவச சீருடை” டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் இருக்கிறது…. அரங்கையே அதிர வைத்த சிறுவனின் பேச்சு….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உயர்நிலைக்குழு தலைவர் நீதிபதி டி. முருகேசன் தலைமையில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இந்த சிறுவன் திருப்பரங்குன்றம் ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த சிறுவன் தான் படிக்கும் அரசு பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளதாகவும், கழிவறையில் போதுமான தண்ணீர் வசதி இல்லை எனவும் கூறினார். அதோடு அரசு வழங்கிய டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் இருக்கிறது எனவும் சிறுவன் கூறினான். எனவே சீருடையை ஒழுங்காக இனியாவது தைத்துக் கொடுங்கள் என்று கூறி அரங்கையே அதிர வைத்தார். இந்த சிறுவன் கூட்டத்தின் முடிவில் உயர்நிலைக் குழு தலைவரை சந்தித்து என்னுடைய கோரிக்கை என்பது என்னுடன் படிக்கும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான கோரிக்கை என்று கூறினான். இதனால் சிறுவனை உயர்நிலை கல்வி குழு தலைவர் பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து உதயன் செய்தியாளர்களை சந்தித்து எங்களுடைய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை ஏதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தான் வழங்குவது போன்று பாஜக ஆதரவாளர்கள் சிறுவனின் பேச்சை அரசியல் ஆக்குகின்றனர்.

Categories

Tech |