ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன அனுமதி அட்டை நாளை காலை 9 மணியளவில் திருப்பதி -திருமலை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதம் பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் நாளை மறுநாள் காலை 9 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.