Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இலவச தொழிற்பயிற்சி …. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இலவச தொழிற் பயிற்சி பெற மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பித்து பயிற்சியில் சேரலாம் என்று மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில், “சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறக்க NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி கீழ்க்காணும் தொழிற் பாடப் பிரிவுகளில் அளிக்கப்படுகிறது. சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவசப் பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ் மற்றும் பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.500 பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது. மேலும், பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசாணையின்படி விலையில்லாமல் மடிக்கணினி வழங்கப்படும். 2021-22ஆம் கல்வி ஆண்டுக்குத் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து நேரடியாகச் சேர்க்கை பெறலாம்.

 

Categories

Tech |