Categories
மாநில செய்திகள்

இலவச பஸ் பாஸ் கிடையாது…. மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!!

அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, சலுகை கட்டண அட்டை பெற்றே பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் சட்டக் கல்லூரி அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவச பஸ் பாஸ் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

அதில் அரசிடமிருந்து தெளிவான உத்தரவு வரும் வரை தற்போதைய உத்தரவுபடியே மாணவர்கள் பயணிக்க வேண்டும். இலவச டிக்கெட் கேட்டு பஸ்களில் தகராறில் ஈடுபடக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |