தமிழக அரசு கொண்டுவந்த இலவச பஸ் டிக்கெட் திட்டத்தின் மூலமாக பல பெண்களின் குடும்ப செலவுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். இன்றுடன் அவர் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு தமிழக சட்டமன்றத்தில் பேசினா.ர் மேலும் அவர் சட்டமன்றத்துக்கு வருவதற்கு முன்பு 29-சி பேருந்தில் பயணம் செய்து அங்குள்ள பயணிகளிடம் கருத்து கேட்டு பின்னர் அந்த தகவல்களை சட்டப்பேரவையில் பேசினார்.
வீட்டு வேலை பார்க்கும் ஒரு பெண் மாதம் 5000 சம்பளம் வாங்குகிறார் என்றால் பேருந்தில் இலவசம் என்ற சலுகை மூலமாக அவர் மாதம் 850 ரூபாய் மிச்சம் படுத்துகிறார் எனக்கூறினார். அதே மாதம் 9000 சம்பாதிக்கக்கூடிய பெண் 900 ரூபாய் மிச்சபடுத்துவதாக கூறினார். நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் மாதம் ஒன்பது ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவர் மாதம் 1020 ரூபாய் மிச்சம் செய்வதாக கூறினார். தினக்கூலித் தொழிலாளியான ஒரு பெண் மாதம் 9,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். அவருக்கு மாதம் 750 ரூபாய் மிச்சம் படுத்துகிறார். இப்படி ஏப்ரல் 30ஆம் தேதி வரை மொத்தம் 106 புள்ளி 34 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டு உள்ளனர்.
அவர்கள் வாங்கும் மாத வருமானத்தில் 11% மிச்சமாகிறது. இப்படி மிச்சமாகும் பணத்தை அந்த பெண்கள் சேமித்து வைக்கிறார்கள். அன்றாட செலவுக்கு இல்லை என்ற நிலை இருக்கக்கூடிய பெண்கள் சேமித்து வைக்க கூடியவர்களாக மாறியுள்ளார்கள். 5,000 முதல் 12 ஆயிரம் வரை சம்பாதிக்கக்கூடிய பெண்களுக்கு சுமையை குறைக்க கூடிய ஒரு திட்டமாக இது அமைந்து இருப்பதாக கூறினார். ஒரே கையெழுத்தில் மூலமாக கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதை நிரூபித்து ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்று முதல்வர் பேசினார். இப்படி பல்வேறு திட்டங்களை அடுக்கிய முதல்வர் ஓராண்டு சாதனையை ஒவ்வொன்றாக விளக்கிப் பேசினார். மேலும் ஒவ்வொரு மூளையில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று அவர் தெரிவித்தார்.