தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வியில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் நடப்பு நிதி ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக இலவச மருத்துவ படிப்பு மேற்கொள்வது குறித்து தேனி நலம் அகாடமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களும் மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக இலவசமாக மருத்துவ படிப்பிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அதில் அவசர சிகிச்சை உதவியாளர்,சர்க்கரை நோய் ஆலோசகர் மற்றும் உணவுகளை உதவியாளர் ஆகிய படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருப்பது மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ், நவீன மருத்துவமனை வசதியுடன் கூடிய நேரடி பயிற்சிகள், இலவச சீருடை மற்றும் ஊக்க தொகை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் தேனி நலம் அகாடமியில் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் வழங்கும் டிப்ளமோ இன் லேப் டெக்னீசியன்,டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டன்ட் போன்ற 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தேனி நல மருத்துவமனைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது 88700 07020 என்ற எண்ணின் மூலமாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.