Categories
மாநில செய்திகள்

இலவச மாநகரப் பேருந்து முழுவதும் பிங்க் வர்ணம்….. போக்குவரத்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் சாதாரண கட்டணம் கொண்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது . அதில் சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.

இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்பதற்காக இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் கடந்த ஆறாம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த பேருந்துகளில் முன்புறம் மட்டும் பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது பேருந்து முழுவதும் பிங்க் வர்ணம் பூசும் பணி தொடங்கியுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |