Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி…. எவ்வளவு தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரியம் தலைமை அலுவலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி நிர்வாகமானது எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்திருக்கிறது. மின்வெட்டு தொடர்பான புகார்கள் இல்லை.

11200 மெகாவாட் அளவுக்குதான் நேற்று முன்தினம் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின்தேவை குறைந்திருக்கிறது. கூடுதல் செலவு காரணங்களால் அனல்மின் நிலைய உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது. 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. இலவச மின்சாரத்துக்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Categories

Tech |