உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். இதில் கோவா மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி கட்சித் தலைவர்கள் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில் கோவா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் கோவாவில் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்..