Categories
தேசிய செய்திகள்

இலவச மின்சாரம்… பெண்களுக்கு மாதம் ரூ.1000…. கெஜ்ரிவால் அதிரடி வாக்குறுதி….!!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜரிவால் இன்று மொஹாலியில் பேசிய போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை வளர்ச்சியடைய செய்வதற்கும், வளம் பெறுவதற்கும் உள்ளிட்ட 10 அம்ச ‘பஞ்சாப் மாதிரி’ திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

அதுமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பிற்காக கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு திரும்பும் அளவிற்கான வளமான பஞ்சாபை உருவாக்குவோம். அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் இருந்து போதைப்பொருள் கும்பலை ஒழித்து, அனைத்து கொலை வழக்குகளிலும் நீதியை உறுதி செய்வோம், ஊழலை ஒழிப்போம். மேலும் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கபடும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம்தோறும் 1000 வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |