இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் மலிவான விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையில் தகுதியான நபர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி தகுதியான நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் வாயிலாக பல்வேறு வகையான முறைகேடுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
மேலும் இப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தின் வாயிலாக யார் வேண்டுமானாலும்..? எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற முடிகிறது. அதாவது தங்களின் சொந்தஊரை விட்டு வெளியூர் அல்லது வெளிமாநிலத்திற்கு சென்றாலும் தங்களின் கைரேகை பதிவை கொண்டு ரேஷன் பொருட்களை பெற முடியும். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகளுக்காக இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தது. இதனிடையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முடிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவடைய இருப்பதால், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக அரசுக்கு 3,270 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.