நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வரும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நீங்கும் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இலவச ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.