Categories
மாநில செய்திகள்

இலவச ரேஷன் மற்றும் மானியம் நிறுத்த முயற்சி….? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!!!!!!

ஏழை எளிய மக்கள் பொங்கி சாப்பிட ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கஜானா காலியாகி நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதன் காரணத்தினால் இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், பிற மானியத் திட்டங்கள் மற்றும் வரி சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்த படுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பது ஏழை எளிய மக்களுக்கு பேரிடியை  கொடுத்திருக்கிறது. மேலும் நிதிநிலை மோசமாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருந்தாலும் ரேஷன் அரிசி பதுக்கி அதை முறையாக மக்களுக்கு போய் சேராமல் இருப்பதற்கு பல அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் காரணம் என தெரிவிக்கின்றனர்.

அண்மையில் திருச்சி லால்குடியில் ரேஷன் அரிசி பதுக்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அடுத்து லால்குடி தாசில்தார் சிசிலியா சுகந்தி துணை வட்டாட்சியர் கார்த்திக், தனி வருவாய் அலுவலர் இளவரசி மற்றும் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 8,000 கிலோ மதிப்பு 170 அரிசி மூட்டைகள் எடை மெஷின் போன்றவற்றை கீர்த்திவாசன் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் குடிமங்கலம் நால் ரோடு சந்திப்பில் ரேஷன் பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு வேன் சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அதில் ரேஷன் அரிசி 2 டன் மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும். ரேஷன் அரிசி டன் கணக்கில் பதுக்கி வைத்து விற்று பணம் பார்க்கும் அரசு அதிகாரிகள் ரேஷன் ஊழியர்கள் ஒருபக்கமிருக்க மத்தியில் நிதிநிலை சரியில்லை எனக் கூறி இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு தடுமாறி வருகிறது.

Categories

Tech |