Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இலவச விழிப்புணர்வு என்ற பெயரில் அனுமதி” பொதுமக்களிடம் பணம் வசூலித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!

சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

இதனால் தனலட்சுமி அங்கு சென்று இலவசமாக விழிப்புணர்வு செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பணம் வசூல் செய்ய கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு தனலட்சுமி கூறியதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தனியார் நிறுவன செயலாளர் ஷோக்கத் அலி, பணியாளர் ராஜேஷ், மற்றும் அவருடன் பணியில் இருந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |