Categories
மாநில செய்திகள்

இலவச விவசாய மின்சார இணைப்பு…. இதுவே முதன் முறை…. போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும்…. முதலமைச்சர் ஸ்டாலின்….!!!

நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்ததிலிருந்து இதுவரை 52,000 இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.மேலும் ஆண்டுக்கு 40,000 விவசாய இணைப்புகள் வழங்க அரசு அனுமதிக்கிறது. அதில் 70 சதவீதம் வரை இணைப்பு  வழங்கி  மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றது. தற்போது சட்டசபை தேர்தல் 2020-2021-ஆம் ஆண்டில்  50 ஆயிரம் விவசாய இணைப்புகள் அனுமதிக்கப்பட்டது. அதில் 40 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு  செப்டம்பரில் துவங்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இதுவரை 52 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “விவசாய மின் இணைப்பு கேட்டு 2003 முதல் 2021 மார்ச் வரை 4.64 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இந்த ஆண்டில் ஒரு லட்சம் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மோட்டார் பம்ப் உடன் தயாராக இருக்குமாறு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தரப்பிலிருந்து தயார்நிலை கடிதம் வந்ததும் மின் இணைப்பு வழங்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்ததால் மின் வழித்தடம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு விவசாய இணைப்பு  வழங்கியது இதுவே முதல் முறையாகும். அடுத்த மாதத்திற்குள்  48,000 இணைப்புகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |