பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், சொந்த வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் காசிராஜா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் பாண்டி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் ரவி முருகன் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.