Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இலவச வீட்டு மனை பட்டா வழங்க… மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு…!!!

பாணாவரம் பைரவா காலனி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பைரவா காலனியின் 20 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்டி 36 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் ஆய்வு மேற்கொண்ட போது காலி மனைகள் வீடு கட்டுவதற்கு ஏற்ற முறையில் இருக்கின்றதா? என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டார்.

இந்த ஆய்வின் போது சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார், நேர்முக உதவியாளர் எத்திராஜ், வருவாய் ஆய்வாளர் சுபஸ்ரீ, கிராம நிர்வாக அலுவலர் முரளி, மனோகரன் ஆகியோர் உடன் இருந்தார்கள். இதையடுத்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அரசு சார்பாக 86 பேருக்கு புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற இருக்கிறது. அந்த இடத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

Categories

Tech |