Categories
உலக செய்திகள்

இலவச வைஃபை வேண்டுமா…? ‘அப்ப இந்த புதிரை கண்டுபிடிங்க’…. உணவகம் வைத்த சவால்… இது புதுசா இருக்கே…!!!

அமெரிக்காவில் ஒரு உணவகத்தில் இலவச வைஃபை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த புதிரை கண்டுபிடியுங்கள் என்று போடப்பட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உணவு சாப்பிடுவது முதல் காய்கறி, வீட்டிற்கு தேவையான பொருள்கள் அனைத்துமே தற்போது இணையதளம் மூலமாகவே வாங்கப்பட்டு வருகின்றது. அதிலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இப்படி அனைத்திற்குமே இணையம் என்பது மிக முக்கியமாக இருக்கின்றது. ஹோட்டல், மால்கள் போன்ற சில வணிக இடங்களில்
மட்டுமே இலவச வைஃபை சேவை வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆண்டோரியோ என்ற பகுதியில் செயல்பட்டுவரும் தாய் ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் இலவச சேவை வழங்கப்படுகின்றது. ஆனால் அந்த ரெஸ்டாரன்ட் செல்வோர் வைஃபையை பயன்படுத்த அதற்கான பாஸ்வேர்டை அவர்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அந்த உணவகத்தின் சுவரில் ஒரு புதிர் எழுதப்பட்டிருக்கும். அந்த பாஸ்வேர்டை கணித மேதைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த உணவகத்தில் கணித வினா ஒன்று சுவரில் எழுதப்பட்டிருக்கும்.

இதற்கான விடை தான் அந்த ஹோட்டலின் wi-fi பாஸ்வேர்டு. அந்த வினாவுக்கு விடை தேட முடிந்தால் நீங்கள் இலவசமாக இணையத்தை பயன்படுத்த முடியும். இப்படி நூதன முறையில் வாடிக்கையாளர்களுக்கு சவால் விடுத்த இந்த உணவகத்தின் வைஃபையை பயன்படுத்துவதை காட்டிலும், அந்த கணிதத்திற்கு விடை தேட வேண்டும் என்பதற்காகவே பலரும் அங்கு வந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த ரெஸ்டாரண்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பலரையும் இது ஈர்த்துள்ளது.

Categories

Tech |