நித்தியகல்யாணி பூவில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
கல்யாணி பூ இதை பலரும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். சிலர் வீட்டிற்கு முன்பாக இந்த பூ இருக்கும். இந்த பூ அழகுக்கு மட்டுமல்ல பல நன்மைகளையும் தருகிறது. சர்க்கரை நோயை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நித்திய கல்யாணி பூ 5 முதல் 10 வரை எடுத்து, தேவைக்கேற்ப சீரகத்தையும் எடுத்து இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்துவர சர்க்கரை நோயின் அளவு குறையும்.
இந்த கல்யாணி பூ இலை ஆகியவை புற்றுநோயை தடுக்கும் அருமருந்து. பெண்களின் மார்பக புற்றுநோய்க்கான நல்ல மருந்தாகவும் நித்தியகல்யாணி பயன்படுகின்றது.
நித்தியகல்யாணி பூவின் இலையை அரைத்து சீழ் பிடித்த புண்களில் தடவலாம். அவ்வாறு செய்தால் நச்சு நீர் வெளியேறி புண் விரைவில் குணமாகும்.
நித்தியகல்யாணி வெள்ளையணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் அசதி குணமாக ஐந்து நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நீரழிவைக் கட்டுப்படுத்த நித்தியகல்யாணி வேரை ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் போதும். வாரம் 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கல்யாண லிருந்து எடுக்கப்படும் மூலப்பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.