கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது வீட்டில் முடங்கி இருந்த பொது மக்கள் தலையில் இடியாய் இறங்கியது. சென்னையில் கூட கடந்த 2 நாள்களாக புதுப்புது உச்சம்பெற்ற தங்கம் விலை மக்களை அதிர வைத்தது.
இந்த நிலையில்தான் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஊரடங்கால் இல்லத்தரசிகள் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும், தங்கத்தின் விலை குறைந்து இருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ. 26 குறைந்து 4, 692 ரூபாய்க்கும், சவரன் 37 ஆயிரத்து 536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசு குறைந்து, ரூபாய் 55.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.