இல்லத்தரசிகளுக்காக, வீட்டை பராமரிக்க கூடிய பயனுள்ள குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்.
* வீட்டில் வைத்துள்ள அலங்கார பிளாஸ்டிக் பொருள் அல்லது பூச்செண்டு இதை எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென்று இருக்காது. அதற்கு ஹேர் ட்ரையரை கொண்டு சுத்தம் செய்தால் நொடியில் பளிச்சென்று ஆகிவிடும்.
* சோப்பு கரைசலில் சிறிது சோடா மாவை கலந்து அதில் கறி துணிகளை ஒரு மணிநேரம் ஊற வைத்து துவைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி துணிகள் பளிச்சென்று இருக்கும்.
* வீட்டில் பாத்திரம் கழுவும் மிஷின் அடைத்துக்கொண்டால், சோடாமாவு வினிகர் கலந்து ஊற்றி ஒரு மணி நேரம் கழித்து, சுடுநீர் ஊற்றி விடுங்கள். அடைப்பு நீங்கி விடும்.
*வாஷ் பேஷன் கழுவும் முன் அதை அடைத்து விட்டு, அதில் முழுக்க வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் தேங்க விடுங்கள். பிறகு அடைப்பை நீக்கி தண்ணீர் வெளியேறி விடுங்கள். பின்பு சிங்கை நன்றாக தேய்த்து கழுவினால் நாள்பட்ட அழுக்குகள் நீங்கிவிடும்.
*வைட் வினிகரை நீரில் கலந்து வீட்டைத் துடைத்தால் தரையில் உள்ள கிருமிகள் அழிவதோடு தரையும் பளபளப்பாக இருக்கும்.
*காய்கறி நறுக்கும் பொழுது அடியில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டால் சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். எண்ணெய் கீழே கொட்டிவிட்டால் உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவை போட்டு துடைத்தாள், எண்ணெய் பிசுபிசுப்பு இருக்காது.
*உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். உப்பை வெறும் கையில் எடுத்தால் அதில் நீர் கசியும், அதற்கு பச்சைமிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒரு முறை அதை மாற்றினால் போதும்.
*துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்தால், 15 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் இருக்கும்.