சிலிண்டர்களின் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணெய் விலை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சுமார் 150 ரூபாய் வரை உயர்த்தியது. கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 85 ஆக இருந்தபோது சமையல் எரிவாயு 899 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 83 டாலராகவும், இந்தியாவிற்கான விலை பேரலுக்கு 77 டாலராகவும் உள்ளது. இதனால் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அரசு எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் சமையல் சிலிண்டர் விலை தொடர்பாக மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.