சினிமா தொடங்கி சின்னத்திரையிலும் பிரபலமான நடிகை தேவயானி புது சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை தேவயானி புது சீரியலில் நடிப்பதாக தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 90s கிட்ஸ் மனதில் தனது குடும்ப பாங்கான நடிப்பால் நீங்கா இடம் பிடித்த இவர் அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை படத்தில் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். முகம் பார்க்காத காதலை எவ்வளவு அழகாக வெளிக்காட்ட முடியுமோ அவ்ளோ அழகாக உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் விஜயுடன் பிரண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய் படங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலுல் இடம் பிடித்துள்ளார். கோலங்கள் சீரியலில் நடிகை தேவயானி உடன் இணைந்து தீபா வெங்கட், அபிஷேக், ஈஸ்வரமூர்த்தி, திருச்செல்வம் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் 6 வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தேவயானி புதிய சீரியலில் நடிப்பதற்கு ஒப்பந்தம் அளித்துள்ளார். 12 வருடங்களுக்கு பின் அபி பாஸ்கர் ஜோடி மீண்டும் இணைகிறது. பாஸ்கராக நடித்த அபிஷேக்கும் இந்த நாடகத்தில் நடிக்கவுள்ளார். இந்த சீரியல் ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான பூஜை நடைபெற்று விட்டது அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
https://www.instagram.com/p/CL5-2AYhDjU/?utm_source=ig_web_copy_link