இல்லத்தரசிகளுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது அது என்னவென்றால் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சமையல் எண்ணெய் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், நிறுவனங்களும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை மற்றும் சமையல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த அறிவிப்பு அவர்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது.