வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. அதில் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இதற்கு முன்னிருந்த அதிமுக ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து விட்டனர். இதனால் இப்போது பல்வேறு திட்டங்களின் மூலமாக வருவாயை அதிகரித்து மக்களுக்கு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே இருந்த அதிமுக ஆட்சியாளர்களால் தான் உரிமை தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவில்லை. எனவே விரைவில் அந்த திட்டமும் நடைமுறைக்கு வர இருக்கிறது. தேர்தல் அறிக்கையின் போது கூறியுள்ள பால் மற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதையடுத்து பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளன. சுதந்திரமான நமது நாட்டில் சுதந்திரம் இல்லாமல் மதுரைக்கு அருகே உள்ள பாப்பாரப்பட்டி தலித் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சுதந்திரமாக அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். மேலும் அனைத்து குடும்பத்தினரையும் தன் குடும்பம் போல் நினைத்து நடப்பவர் தான் ஸ்டாலின். அயப்பாக்கத்தில் ஊராட்சியில் பல்வேறு குறைகள் உள்ளதையும் அவற்றை பூர்த்தி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த குறைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.