Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது தெரியுமா….? வெளியான புதிய அப்டேட்…!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் திமுக சார்பில் ஓராண்டு விளக்க சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூட்டுறவுத் துறை சார்பாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், கடன் தள்ளுபடி உட்பட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |