ரஷ்யா-உக்ரைன் இடையே போர் உச்சத்தில் இருப்பதால் பாமாயில், சூரியகாந்தி எண்ணை விலை உயரும் என்று கூறப்படுகிறது. இவற்றை உலக அளவில் அதிகமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகள் தான் ஏற்றுமதி செய்கின்றன.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை உள்ளிட்ட காரணங்களால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.