Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… இரண்டு மடங்கு உயர்ந்த எண்ணெய் விலை…. அதிர்ச்சித் தகவல்…!!!!!!

வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கு பார்த்தாலும்  சமையல் எண்ணெய்களில் முதன்மையாக விளங்குவது பாமாயிலாகும். பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்ம ஊரில் எண்ணெய்ப் பனை என்பது பெயராகும்.

மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு ஆண்டுக்கு 45 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதற்கடுத்த இடத்தில் உள்ள மலேசியாவில் 19 மில்லியன் டன்னும், தாய்லாந்தில் 3 மில்லியன் டன்னும் உற்பத்தியாகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா தொடங்கி அசாம், அந்தமான் வரை உள்பட 16 மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வளர்க்கப்படுகிறது. எண்ணெய் பனை.மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை தஞ்சை, திருச்சி, நாகை தொடங்கி வறட்சியான வேலூர், தருமபுரி வரை தற்போது 26 மாவட்டங்களில் பரவிக்கிடக்கின்றன பாமாயில் மரங்கள். ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் மகசூல் தரும் நிலையை அவை எட்டவில்லை.

நடவு செய்த 4 ஆண்டுகளில் தொடங்கி, தென்னையைப் போல ஆண்டு முழுவதும் பலன் தரக் கூடியது பாமாயில் குலை. ஒரு ஏக்கரில் நிலக்கடலையைப் பயிர் செய்தால், அதில் இருந்து 300 கிலோ எண்ணெய் மட்டுமே கிடைக்கும். சூரியகாந்தியில் 500 கிலோ, எள்ளில் 150 கிலோ, தேங்காயில் 750 கிலோ அளவுக்கே எண்ணெய் கிடைக்கும். ஆனால், அதே ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 3 டன் எண்ணெய்த் தரக்கூடியது பாமாயில் மரம் மட்டுமே.

இந்நிலையில் கடலை, தேங்காய், சூரியகாந்தி, நல்லெண்ணெய்க்கு மாற்றாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் பாமாயிலை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தோனேசியா, மலேசியா, உக்ரைனில் போர் நீடிப்பதால்  இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றுமதி செய்ய ஏப்ரல் 28 முதல் தடை விதிக்கப்பட்டது. மலேசியாவில் மட்டும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பாமாயில் விலை அதிகரித்துள்ளது.

Categories

Tech |