Categories
மாநில செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்”… குறைந்து வரும் சமையல் எண்ணெய் விலை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!!!

உக்ரைன், ரஷ்யா போர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு, ஏற்றுமதி தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் பொதுமக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் விலை குறைய தொடங்கிவிட்டதாக மதிய உணவு துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள விபரங்களின்படி சமையல் எண்ணெய்களில் சராசரி சில்லரை விலை குறைய தொடங்கி இருக்கிறது.

எனினும் கடலை எண்ணெய் விலை மட்டும் குறையாமல் இன்னும் கிலோவிற்கு 150 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதானி வில்பர், மதர் டெர்ரி போன்ற சில மட்டும் கடந்த வாரம் சமையல் எண்ணெய்களில் விலையை லிட்டருக்கு ரூபாய் 10 முதல் 15 குறைந்துள்ளது. விலை குறைக்கப்பட்ட எண்ணெய்கள் விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. மேலும் சமையல் எண்ணெய் மட்டும் அல்லாமல் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயராமல் நிலையாக இருப்பதாக உணவு துறை செயலாளர் சுதான்ஷூபாண்டே கூறியுள்ளார்.

Categories

Tech |