Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. “மேலும் மேலும் குறையும் தக்காளி விலை”…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகி வந்தது.  சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி இன்று கிலோவிற்கு ரூபாய் 20 வரை குறைந்து முதல் ரக தக்காளி கிலோ 40 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி ரூபாய் 30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பொதுவாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து ஆயிரம் டன்னுக்கும் அதிகமான அளவில் வரும் போது தக்காளியின் விலை குறையும். ஆனால் கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து மழை அதிகரித்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சென்னை கோயம்பேடுக்கு கடந்த வாரங்களில் 500 டன் தக்காளி மட்டுமே வந்தது. தற்போது 800 முதல் 900 டன் தக்காளி வருவதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தக்காளியின் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |