Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே இந்த எண்ணுக்கு…. ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க…. சிலிண்டர் வீடு தேடி வரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது.

இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் கேஸ் சிலிண்டர் டெலிவரி பணியை இந்தியன் ஆயில் நிறுவனம் மேலும் எளிதாக்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் உடனடியாக சிலிண்டர் வீடு தேடி வரும். இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியன் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு நாங்கள் எளிதான வழியை அறிமுப்படுத்துகிறோம். 8454955555 என்ற எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

சிலிண்டர் உங்கள் வீட்டு வாசல் தேடி வரும் என்று தெரிவித்துள்ளது .இதன் முதற்கட்டமாக ஒடிசா, கோட்டா பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சேவை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Categories

Tech |