Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகள் குஷியோ குஷி…! இனி சிலிண்டருடன் இதெல்லாம்…. டெலிவரி செய்யப்படுமாம்….!!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் டாபர் நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இல்லத்தரசிகளுக்கு எளிதாக வீட்டிலிருந்து புக்கிங் செய்தாலே சிலிண்டர்  டெலிவரி செய்யப்படுகிறது.  அதுபோன்று தற்போது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சிலிண்டர்  மட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள்  சிலிண்டர் உடன் சேர்த்து டெலிவரி செய்யப்படும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி டாபர் நிறுவனத்தின் வேகமான விற்பனையாகும் நுகர்பொருட்கள் இன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம்  டெலிவரி செய்யப்படும்.

மேலும் சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரி மேன் இந்த பொருட்களை டெலிவரி செய்வார். இந்த இரண்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனதின்  சுமார் 14 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நாடு முழுவதும் 12, 750 விநியோகஸ்தர்களும் 90,000டெலிவரி பணியாளர்களும்  உள்ளனர். மேலும் இவ்வொப்பந்தத்தின் மூலம் டாபர் நிறுவனம் அதிக சந்தை வாய்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |