இல்லம் தேடி கல்வி மருத்துவம் போன்று இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என நீதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது நன்னிலம் தொகுதியில் கருவூல அலுவலகத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என உறுப்பினர்கள் ஆர் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலில், அனைத்து துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நீதித்துறை. எங்களது செலவுகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள வசதியை பயன்படுத்தும் நிலை 75 சதவிகிதம் இருக்கிறது.
இங்கு உள்ள கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் வைத்து இணைய சேவை மையங்களாக செயல்படுத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். எந்தவொரு குடிமகனும் அலுவலகம் தேடி வராத நிலையை உருவாக்குவதே எங்கள் திட்டமாகும். கட்டடம் கட்டுவதால் பல உங்கள் ஏற்படுகிறது. அந்த கட்டடங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் பாலடைந்துவிடுகிறது. கட்டடம் கட்டுவது எளிது ஆனால் அதனை பராமரித்தல் கடிதம். கட்டிடம் கட்டினாலும் ஊழியர்களை பணியிடங்களை நிரப்புவது சிரமமாக இருக்கிறது.
மேலும் பெரிய மாநகரங்களில் பணியிடங்கள் நிரம்புகின்றது. பின்தங்கிய பகுதிகளில் யாரும் வேலைக்கு செல்வது கிடையாது. எனவே வீட்டை தேடி சேவைகளை கொண்டு சேர்க்க நாங்களோ அல்லது வங்கிகள் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் நிலுவையிலுள்ள பணிகள் முடிக்கப்படும். மேலும் புதிதாக கட்டடம் கட்ட சிந்தித்து தான் செயல்படுவோம். மாவட்ட ஆட்சியகரங்களில் அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து இருக்கின்றன. ஊராட்சி அலுவலகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. அதனால் ஒரே இடத்தில் அரசின் சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார் என கூறியுள்ளார்.