Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வித் திட்டம்…. ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதன்படி சென்னை மண்டலத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அதில் இல்லம் தேடி கல்விக்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்பட வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளிப் பணியில் ஈடுபடவும் வேண்டும். இதில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |