தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை புதிதாக அறிமுகபடுத்தியுள்ளனர். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 தெரு நாடகக் கலை குழுக்களை அமைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனுடைய தொடக்கவிழா தேனி கார்னல் ஜான் பென்னிகுக் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள 443 குடியிருப்புகளில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.