Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம்…. மறுபரிசீலனை செய்க…. முத்தரசன் வேண்டுகோள்…!!!

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மரக்காணம் முதலியார் குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி முடிந்த பிறகு தினமும் மாலை ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வலர்களால் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இல்லம் தேடி கல்வித்திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இல்லம் தேடி கல்வி திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் ஷாகாக்கள் நடத்தும் “சங்பரிவார்” கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |