தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டமானது கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எந்த ஒரு பட்டதாரியாக இருந்தாலும் பாடம் நடத்தலாம் என்ற வகையில் தன்னார்வலர்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் மே 14 – 31ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.