Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை நியமிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு சார்பாக இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.200 கோடி செலவில் மாணவர்களை பள்ளிகளில் இல்லாமல் வீடுகளுக்கு அருகே பொதுவான இடங்களில் அமரவைத்து தன்னார்வலர்கள் வழியே ட்யூசன் எடுக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான தன்னார்வலர்களை நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பிளஸ் 2 முடித்தவர்கள் முதல் ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர்கள் வரை தன்னார்வலர்கள் தேர்வு செய்ய வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களின் கல்வித்தகுதி,சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.மாணவர்களை கையாளும் திறன் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய பள்ளிகளில் திறனறிதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். கல்விச் சான்றிதழை சரிபார்த்த பின்னரே தேர்வு செய்ய வேண்டும். குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |