Categories
உலக செய்திகள்

இல்லறம் ஆரம்பித்த 4 நாட்களில்…. தேனிலவு சென்ற புதுமணத்தம்பதிக்கு…. தயாராகும் இறுதிச்சடங்கு…!!

தேனிலவுக்கு சென்ற புதுத்தம்பதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களின் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்ஹாட்டனில் வசித்து வந்த தம்பதிகள் Mohammad Malik(26) – Noor Shan(29). இவர்களுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில், தேனிலவுக்காக கரீபியன் தீவான Turks, caicos பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு அவர்கள் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரோட்டம் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அதை கவனித்த சிலர் அங்கிருந்து ஓடி வந்து இருவரையும் வெளியே இழுத்து வந்து முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியாததால் உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து malik தந்தையான Col.r. maqpool கூறுகையில், “என் இரண்டு பிள்ளைகள் இல்லாமல் போனது எங்களுக்கு ஒரு பேரிழப்பு. மேலும் இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்வது எங்களுக்கு பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்களில் கண்ணீர் வழிய தெரிவித்துள்ளார். இந்நிலையில் இத்தம்பதியர்களுக்கு நாளை நியூஜெர்சியில் உள்ள teenneck என்ற இடத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதால் அவர்களுடைய குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.

Categories

Tech |