தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரு. கமலஹாசன் டுவிட்டர் பதிவில் நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர் எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என குறிப்பிட்டுள்ளார். ஐயா ஆட்சியாளர்களே தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என கண்டனம் தெரிவித்துள்ள திரு. கமலஹாசன் மக்களின் ஏழ்மையுடன் விளையாடி பழகிவிட்ட நீங்கள் அவர்கள் உயிருடனும் விளையாட துணிந்தால் உங்களின் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.