Categories
மாநில செய்திகள்

“இல்லை இல்லை” என்ற சூழலே இல்லாத…. நிலையை உருவாக்கியுள்ளோம் – முதல்வர் உரை…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம். தற்போது “இல்லை இல்லை” என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |