புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து 3ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார் என்றும், அவரை திரும்ப பெற வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சாலையில் அமர்ந்து இங்கேயே இரவுகளிலும் தூங்கி மூன்றாவது நாளாக போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, யாருக்கும் யாரும் போட்டி கிடையாது. அவர் அவர்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் இருக்கின்றது புதுச்சேரி மாநில மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். புதுச்சேரி மாநில மக்களுக்கு என்னென்ன திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியும். நாங்கள் கோப்புகளை அனுப்பினால் அதை திருப்பி அனுப்ப கிரண்பேடி அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
இழந்த செல்வாக்கை பெறுவதற்கு, அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற போராட்டம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு, இது போன்ற போராட்டம் புதிதாக ஒன்றும் நடக்கவில்லை. கடந்த ஏழு மாதமாக கொரோனா இருந்த போது போராட்டம் நடத்த முடியாது. அதனால் கொரோனா குறைந்த பிறகு இப்பொழுது நடத்துகின்றோம். இது மக்களுக்காக நாங்கள் போராட்டம் நடத்துகின்றன போராட்டமே தவிர, எங்களுக்காக நங்கள் நடத்தவில்லை.
மருத்துவ இட ஒதுக்கீடு, பொங்கல் பரிசு போன்ற தமிழக அரசின் திட்டங்களை நீங்கள் காப்பி அடிக்கீறீர்கள் என்ற கேள்விக்கு, இல்லை இல்லை… தமிழ்நாட்டை நாங்கள் காப்பி அடிக்கவில்லை. எங்களைப் பார்த்து தான் தமிழ்நாடு காப்பி அடித்துக் கொண்டிருக்கின்றது. பொங்கல் பரிசு என்பது ஒவ்வொரு வருஷமும் கொடுக்கின்றோம். அவர்களை பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.