சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை வேளாண் படிப்பில் அரசு பொது ஒதுக்கீட்டின் கீழ் 250 காலி பணியிடங்கள் உள்ளது. அதனைப் போலவே இந்த படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்கள் உள்ளன. தோட்டக்கலை பட்டப்படிப்புகளில் 100 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு மேற்கொள்வதற்கான கட்டடத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய மாணவர்கள் https://www.annamalaiuniversity.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.