முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமானவரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு அமைப்பின் தலைவருமான இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ,கே. சி. வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் வீட்டிலும், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் 29 லட்சம் ரொக்கப்பணமும், 27 கிலோ தங்க நகைகள், சொகுசு கார்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 70 கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில் அந்நிய செலாவணியில் முதலீடு செய்துள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கில் இளங்கோவனும் மாட்டிக்கொள்வார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் இவரிடம் விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.