Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இளநரை உருவாவதற்கான காரணம் என்ன …? அதை எப்படி சரி செய்வது…. படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

இளநரை பிரச்சனை வருவதற்கு ஆய்வு கூறும் தகவல் என்ன என்பதை குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

விட்டமின் கே சக்தி இல்லாமல் இருப்பவர்களுக்கு இளநரை வரும் இந்த சத்தைப் பெற கறிவேப்பிலையை தினமும் நாம் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது அவசியம். தைராய்டு பிரச்சனை, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு, போன்றவற்றால் இதன் ஒரே பிரச்சினை ஏற்படும். மருத்துவ ரீதியாக இதை சரி செய்து விடலாம். அதிக டென்சன் உள்ளவர்களும் இளநரை ஏற்பட வாய்ப்புண்டு.

மரிக்கொழுந்து, நிலவாரை இரண்டையும் அரைத்து தலையில் ஊறவைத்து குளித்தால் இளநரை சரியாகிவிடும். கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்தி பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது. வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து சாப்பிட்டால் இளநரை சரியாகிவிடும்.

மருதாணி, கருவேப்பிலை, நரைமுடி ஆகியவற்றை பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் கருமையான முடி வளரும். இளநரை வந்துவிட்டால் மனதளவில் நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. உங்கள் சாப்பாட்டில் கவனமுடன் நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |